Friday, September 13, 2013

நான் காதலித்த பெண்கள்!



ஆரம்பப்பள்ளியில் அலைக் கூந்தல் அகிலா

உயர்நிலைப் பள்ளியில் உதட்டழகி உமா

கல்லூரிக்காலத்தில் கன்னம் சிவந்த கனகா

வேலை தேடும்போது,வேல்விழி வேணி

பணியில் சேர்ந்த பின் பல்லழகி பவித்ரா

விடுமுறை நாட்களில் விரலழகி விமலா

இத்தனையும் தாண்டி மணம் புரிந்ததோ

அத்தனையும் சேர்ந்த அழகியாம் தங்கமணி!

(பெயர் சொல்ல மாட்டேன்!)

முதல் ஆறும் முடிவில்லா கைக்கிளை!

கடைசியில் வந்ததுதான் அன்பின் ஐந்திணை!!

 டிஸ்கி:(இதெல்லாம் உண்மையில்லீங்கொ!ச்ச்சும்மா)(அய்யோ!கடைசி  மட்டும்  முழுசா உண்மைங்கோ!)



19 comments:

  1. ச்ச்ச்ச்... ச்ச்சும்மாவே இப்படியா...? வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  2. நீங்க எதுகை மோனையோட பேர்கள சொன்னப்பவே தெரிஞ்சிருச்சே...உண்மைன்னு:))

    ReplyDelete
    Replies
    1. வக்கீல் மாதிரி பாயிண்டைப் பிடிச்சீங்க!
      நன்றி ஜோசப் சார்

      Delete
  3. அருமை. பாராட்டுக்கள். மேலும் பலவும் பெற்றிட வாழ்த்துகள்.

    சும்மாச் சொல்லவில்லை, நிஜம்மாவே !

    ReplyDelete
    Replies
    1. முதுகில டின்தான்!
      நன்றி

      Delete
  4. கடைசி மட்டும்தான் பொய், மத்ததுலாம் உன்மைன்னு எங்களுக்கு தெரியாதா!? இப்படிலாம் சொன்னாதானடி விழுகாதுன்னு எங்களுக்கு தெரியாதா?!

    ReplyDelete
    Replies
    1. ”தங்கமணி!ராஜியோட கமெண்ட்டைப் படிக்காதே!”..........
      நன்றி

      Delete
  5. உண்மையில்லை என்று சொன்னாலும் கவிதை கலக்கல்தான்! கவிதைக்கு பொய்தானே அழகு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. //கடைசி மட்டும் முழுசா உண்மைங்கோ//

    நீங்கள் சொல்றதை நம்புறோங்கோ!

    ReplyDelete
    Replies
    1. நம்பித்தான் ஆகணும்!
      நன்றி

      Delete
  7. மீதிப் பாதி நாளை வருமென்று நம்புகிறேன் மிஸ்டர் குட்டன்

    ReplyDelete
  8. எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கு.

    ReplyDelete
  9. டிஸ்க்கி... நம்பிட்டேன்,,

    ReplyDelete