Friday, June 21, 2013

பாதி ராத்திரிப் பசி!



நள்ளிரவு 12 மணியைத் தாண்டி விட்டது.

ஊரடங்கி ஓய்ந்து விட்டது.

பெரிய தெருக்களிலும் சில வண்டிகளைத் தவிர நடப்பவர் அதிகமில்லை.
பசிக்கிறது.

அந்த அகாலத்தில் சென்னை மாநகரில் பசியாற்றிக்கொள்ள எங்கு போகலாம்?

இதோ சில இடங்கள்.


மிட்நைட்எக்ஸ்பிரஸ்-டிடிகே சாலை      
-------------------------------------------------                                   
இரவு ஒரு மணிக்குச் சென்றாலும்,பணியாள் கேட்கிறார்”வடைகறியா, முட்டைதோசையா, கல்தோசையா , எடுத்துச் செல்ல என்ன வேண்டும்?’

ஆம் எடுத்துச் செல்ல மட்டுமே.

அது சரியாய் வராது.

அவர்களது இரவு ஸ்பெசல் கோழி வறுவல் பிரசித்தம்!

ஹை லுக்-சர்தார் படேல் சாலை,அடையாறு.
-------------------------------------------------------------

மத்திய கைலாசுக்கும்,ஐஐடிக்கும் இடையில் உள்ள ஓர் இடம்.

கண்ணில் உடனே படாது.

ஐஐடி மாணவர்கள் சொல்கிறார்கள் இரவு 2 மணி வரை உணவு கிடைக்கும் என்று.

24 மணி நேர உணவகம் என்று சொல்கிறார்கள்.

ரொட்டி ஆம்லெட்டும் மாம்பழச்சாறும் ஆகா!

ஓட்டல் கிரெசண்ட்-நுங்கம்பாக்கம்
-------------------------------------------------
கிராமச்சாலையில் இருக்கிறது

ஒரு மணி வரை உணவு கிடைக்கும்,

நெய்ச்சோறும்,மீன் கறியும் பிரசித்தம்

அது போலவே பரோட்டா-சிக்கன் கூட்டணியும்!

ஆப்பமும் பிரசித்தம் ;ஆனால் 12 மணிக்கு மேல் கிடைப்பது சந்தேகம்!

புஹாரிஸ்-அண்ணாசால
-----------------------------------
அந்த நாள் முதல் இந்த நாள் வரை இரவில் கூட்டம் சேரும் இடம்!

1951 முதல் சேவையில் இருக்கிறது.

1965 இல் அவர்கள் அறிமுகம் செய்ததுதான் சிக்கன் 65

அருகில் இருப்பது சங்கம் ஹோட்டல்.

இரண்டுமே இரவில் நிரம்பி வழியும்!

மத்ஸ்யா,எழும்பூர்
--------------------------
நீங்கள் மரக்கறி உணவு சாப்பிடுபவரா?

உங்களுக்கான ஒரே இடம் மத்ஸ்யா.

இரவு 2 மணிக்கும்  இடம் கிடைக்காதபடிக் கூட்டம்,

எந்த நேரத்திலும் குடுமபத்துடன் செல்லக்கூடிய சிறந்த உணவகம்.


( இந்துவில் வந்த ஒரு கட்டுரை முகநூல் மூலமாகப் பகிரப்பட்டு அதன் முக்கியக் கரு என் மூலம்  உங்களுக்கு வருகிறது.
இரவு  என்றோ சீக்கிரம் ‘வீடு திரும்பாத’ எவரோ எழுதியதோ?!)


8 comments:

  1. இப்போதான் சிறு கிராமங்கள் தவிர்த்து சிறிய டவுன் முதற்கொண்டு எல்லா இடத்திலயும் 24 மணி நேரமும் சாப்பாடு கிடைக்குதே

    ReplyDelete
  2. சென்னையில் உள்ளவர்களுக்கு மிகவும் உதவும்...

    ReplyDelete
  3. கிரசென்ட் ஹோட்டலில் பலமுறை சாப்பிட்டிருக்கிறேன்.... புட்டும் சிக்கனும் அருமையாக இருக்கும்....

    ReplyDelete
  4. அடைப்புக் குறிக்குள் ஒழிந்து கிடக்கும் குட்டனை ரசித்தேன்

    ReplyDelete
  5. ஆஹா... உணவகங்களப் பத்தியும் சாப்பாட்டப் பத்தியும் நீங்களும் எழுத ஆரம்பிச்சாச்சா குட்டன்? சந்தேகமே இல்ல... நீங்களும் பிரபல பதிவர்தான்! ஹி... ஹி...!

    ReplyDelete
  6. ‘தூங்கா நகரம்’ மதுரையின் இரவு உணவு விடுதிகளுக்கு ஈடாகாது சென்னையில் உள்ள உணவு விடுதிகள் என நினைக்கிறேன். தங்களின் கருத்து என்னவோ?

    ReplyDelete
  7. இன்னொரு உணவகம் விரும்பியா? தினம் ஒரு ஹோட்டல் பேரை சொல்லி வீட்டில சமைக்கறதையே தடுத்துடுவீங்க போல இருக்கே! ஏதோ ஆம்பளைங்களுக்கே சமைக்கிற வேலை குறைஞ்சா சரி

    ReplyDelete