Tuesday, September 25, 2012

தங்கமணியும்,நிலமும்!



”செல்லம்!”

“விடுங்க!ராத்திரி வந்தாக் கொஞ்சல் !மத்த நேரம் எல்லாம் என் ஞாபகமே வராது”

“என்னடி செல்லம் அப்படிச் சொல்லிட்ட?”

”ஆமாம் உண்மையைத் தான் சொல்றேன்.வாரத்துல ஆறு நாள் ஆபீஸ்.மீதி ஒரு  நாள் நண்பர்களைப் பார்க்க அது இதுன்னு போயிடுவீங்க.ஆபீஸிலிருந்து வந்தா ராத்திரி படுக்கற வரைக்கு இந்தக் கணினியைக் கட்டிகிட்டு அழறீங்க! கேட்டா வலைப்பூ,மண்ணாங்கட்டின்னு சொல்றீங்க.என்ன சொன்னாலும்
காதுலயே ஏறாது. படுக்கைக்கு வந்ததும் கொஞ்சலோ?

”நான் எவ்வளவு பிரபலம் தெரியுமா?தினம் என் வலைப்பூவுக்கு 1000 ஹிட் வருதாக்கும்!”

”அதுனாலே ஒரு பைசா பிரயோசனமில்லை.பெண்சாதின்னு ஒருத்தி இருக்காங் கறதே ராத்திரிதான் ஞாபகம் வருது உங்களுக்கு.”

“கோபிச்சுக்காதே கண்ணமா!டைம் வேஸ்ட் பண்ணாம வாடா!”

”பக்கத்திலேயே வராதீங்க!ஒண்ணும் கிடையாது.”,

தங்கமணி கோபித்துக் கொண்டு தள்ளிப்படுக்கிறாள்.தன்னைக் கணவன் கவனிப்பதில்லை என்றால் தங்கமணிக்குக் கோபம் தானே வரும்!

இது ஊடல் ;புலவி!
.............................................................
”உனக்கு என்னப்பா? பத்து ஏக்கர் நஞ்சை இருக்கிறது.நல்ல வருமானம் வரும்.”

“எங்க!கொஞ்சம் கொஞ்சமா விளைச்சல் குறைந்து கொண்டேதான் இருக்கிறது.
வருமானமும்.”

”ஏன் அப்படி?யோசிச்சுப் பார்த்தாயா?நீ உன் நிலத்தைப் போய்ப் பார்ப்பதே இல்லை.நீ கவனத்துடன் அதற்கு வேண்டியதெல்லாம் செய்தால் அதுவும் பலன் தரும்.நீ அதைக் கவனிக்கவில்லையென்றால்,அதுவும் கவனிக்காது!”
................................
ஆம். மனைவியும் நிலமும் ஒன்றுதான்.

நான் சொல்லவில்லை;
 
வள்ளுவர் சொல்கிறார்.

”செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்”

நிலத்திற்கு உரியவன்நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால், அந்நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கி விடும்----(டார்.மு.வ, உரை)

ஆம் அது சண்டையல்ல,ஊடல்தான்.அந்த ஊடல் தீர வேண்டுமானால் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.அப்போது ஊடல் தீரும்.இன்பம் பிறக்கும்.—

தங்கமணியானாலும் சரி தங்க நிலமானாலும் சரி!

டிஸ்கி:காமத்துப் பாலிலேயே படம் காட்டிக்கொண்டிருக்கிறாயே ,குறளில் வேறு ஏதாவது எழுதக் கூடாதா,என என் மனச்சாட்சி கேட்டதின் விளைவு இந்தப் பதிவு!

17 comments:

  1. தமக்கு எல்லாக்கலையும் தெரிகிறது நாங்களும் ஒத்துக்கொள்கிறோம்...

    ReplyDelete
    Replies
    1. வாத்தியாரே சொல்லியாச்சு!
      நன்றி

      Delete
  2. நல்ல குறள் ...நல்ல விளக்கம் !நடக்கட்டும்...

    ReplyDelete
    Replies
    1. நல்ல குறள்
      மிக அருமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள்
      டிஸ்கியும் மிக மிக அருமை

      Delete
  3. அதே போல் இது மனைவிக்கும் கூட பொருந்தும். நான் பொதுவா சொன்னேன்!

    ReplyDelete
    Replies
    1. தங்கமணி என்றால் மனைவிதானே!
      நன்றி

      Delete
  4. ஓ அப்படி என்றால் இது காமத்துப் பால் இல்லையா :-)

    //டார்.// டாக்டர் என்பதை சுருக்கு டார் ஆகிய உங்கள் சிந்தனையை எண்ணி வியக்கிறேன்

    ReplyDelete
  5. ம்ம்...வாசிச்சோம் !

    ReplyDelete

  6. விளக்கம் அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. நல்ல விளக்கம்

    ReplyDelete