Saturday, September 1, 2012

தங்கமணி சுடாத ஆனியன் ஊத்தப்பம்!

தங்கமணி ஊரில் இல்லை!

பெரிய விடுதலை எதுவும் இல்லை;இரண்டு நாட்கள்தான்.

இன்று காலை விரதமுறிவுக்கு(breakfast) என்ன செய்யணும்னு நேத்து போகும்போதே தங்கமணி சொல்லிட்டுப் போயாச்சு.,”இட்லி மாவு இருக்குது,தோசை ஊத்திச் சாப்பிடுங் கன்னு!”

வெறும் தோசை சுட மனசில்லை.

வெங்காய ஊத்தப்பம் செய்யலாம் என முடிவெடுத்தேன்.

முருகன் இட்லிக் கடைல சின்ன வெங்காயத்தை வெட்டிப் போட்டு ஊத்தப்பம் செய்வாங்க. அது மாதிரி செய்யலாம்னு பாத்தா சின்ன வெங்காயம் இல்லை.

என்ன குடும்பம் நடத்துறா இவ?!

நல்ல வேளை பெரிய வெங்காயம் ஒண்ணு இருந்திச்சு.

வெட்டி மாவுல போட்டேன்.

நிறைய எண்ணை விட்டு முறுகலான ஊத்தப்பம் சுட்டேன்.

நேத்து வச்ச சாம்பார் மிச்சம்  ஃப்ரிஜ்ஜில இருந்துச்சு.

எடுத்து சுட வச்சேன்

ஆகா!ஊத்தப்பம் ,சாம்பார் காம்பினஷன் அருமை!

செய்முறை:

தேவையான பொருட்கள்

தங்கமணி மிச்சம் வைத்த இட்லி மாவு.

வெங்காயம்-வெட்ட கத்தி

எண்ணை.

சுடுவதற்குக் கல்.

திருப்பச் சட்டுவம்.

எண்ணை அதிகம் ஊற்றி முறுகலாக சுட்டுச் சாப்பிடவும்!

                                                   நான் சுட்ட ஆனியன் ஊத்தப்பம்

ஏ.........வ்!

6 comments:

  1. ஹா.. ஹா.. ஆமா எத்தனை நாளா இப்படி...?

    நல்லாவே செய்து உள்ளீர்கள்...

    ReplyDelete
    Replies
    1. இன்னைக்கு,நாளைக்கு ரெண்டு நாள்தான்!

      டேஸ்ட் கூட நல்லாருந்தது!

      நன்றி தனபாலன் சார்

      Delete
  2. நீங்கள் சுட்டது பொய் எனச் சொல்லிவிடமுடியாது
    படத்துடன் அல்லவா பதிவு கொடுத்துள்ளீர்கள்
    தொடர வாழ்த்துக்கள் (பதிவைச் சொன்னேன்)

    ReplyDelete
    Replies
    1. தொடர்வேன்,பதிவைத்தான்!
      நன்றி ரமணி ஐயா!நீங்களும் தொடர வேண்டுகிறேன்.

      Delete
  3. சின்ன வெங்காயம் விக்கும் விலையில் அதான் சின்ன வெங்காயம் இல்லை. தோசை அருமை.

    ReplyDelete
  4. தோசை படத்தை பார்த்துத் தங்கமணிக்கே ஆச்சரியம்தான்.!

    நன்றி

    ReplyDelete